11/28/2011

புகைப்படங்களை வீடியோவாக மாற்ற/////////////

நன்றி பொன்மலர் பக்கம்,,,,,,,,,,,,,,,
நம்மிடம் இருக்கும் ஒளிப்படங்களை சிடி/டிவிடியில் அப்படியே புகைப்படமாக ஏற்றினால் டிவிடி பிளேயரில் தெரியும் வசதியிருக்கிறது. ஆனால் அவைகளை ஒவ்வொன்றாக கிளிக் செய்து பார்க்க வேண்டியிருக்கும். எல்லா ஒளிப்படங்களும் சீரான இடைவெளியில் பிண்ணணி ஒலியுடன் ஒவ்வொன்றாக காட்டப்பட்டால் நன்றாக இருக்கும். இதனை SlideShow என்பார்கள். அதே நேரத்தில் ஒளிப்படங்கள் வரிசையாகவும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு எபெக்ட்டுடன் வந்தால் சிறப்பாக இருக்கும். மேலிருந்து படம் வருவது, கட்டம் கட்டமாய் வருவது போன்ற மாதிரி வருவதை Transition Effect என்று சொல்வார்கள். 

பல்வேறு புகைப்படங்களை வைத்து அவற்றை வீடியோவாக மாற்ற உதவும் இலவச மென்பொருள் ஒன்று தான் PhotoFilmStrip. எளிமையாகவும் பல்வேறு வடிவங்களில் வீடியோவினை இதில் உருவாக்க முடியும். முதலில் இதனைத் தரவிறக்கி நிறுவிக் கொள்ளவும். New Project மெனுவில் சென்று உங்களுக்குத் தேவையான புகைப்படங்களைச் சேர்க்கவும். இதில் ஒளிப்படங்களை அது இருக்கும் இடத்திலிருந்தே இழுத்து விட்டால் கூட போதுமானது. (Drag and Drop),,,,,,,,,,,,,,,,,,,,,,,,samy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக