10/04/2014

முருங்கை ஈர்க்கு ரசம் .......


தேவையான பொருட்கள்:

முருங்கை ஈர்க்கு - 2 பிடி
மிளகு தூள் - ஸ்பூன்
சீரக தூள் - ஸ்பூன்
உப்பு - தேவைகேற்ப
தக்காளி - 1
மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
கடுகு - தேவைகேற்ப
எண்ணெய் - 1 ஸ்பூன்
தண்ணீர் - 2 கப்

செய்முறை:
* தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

* முருங்கை கிளையில் இளம் குச்சிகளை சுத்தம் செய்து இடித்தபின் ஒரு பாத்திரத்தில் 2 கப் நீர்விட்டு அதில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, தக்காளி, மிளகு மற்றும் சீரகப் பொடி சேர்த்து கலக்கவும்.

* இதனை அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து, கடுகு மற்றும் பெருங்காயம் போட்டு தாளித்து இறக்கவும்.

* சுறுசுறுப்பை தரும் சுவையான முருங்கை ஈர்க்கு ரசம் தயார்.

மருத்துவ பயன்கள்:

முருங்கை கீரையில் சுண்ணாம்பு சத்தும், இரும்பு சத்தும், வைட்டமின் கி மற்றும் சி அதிகமாக உள்ளது. ரத்த சோகை உள்ளவர்கள் இளம் தளிராக உள்ள முருங்கை கீரையை உண்டு வந்தால் ரத்தத்தில் உள்ள ஹீமோகுலோபின் அளவு உயரும்.

முன்பெல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு முருங்கை மரமிருக்கும். அந்த நிலை இப்பொழுது மாறி அமாவாசை, கிருத்திகை அன்று மட்டும் முருங்கை கீரையை தேடி மார்கெட்டுக்கு செல்லும் நிலை உள்ளது. முருங்கை ஈர்க்குகளில் அதிகளவு கால்சியம் உள்ளதால் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்ததாகும்.

பொதுவாக மேனோபாஸ் வயதில் உள்ள தாய்மார்களுக்கு மூட்டு வலி, கை கால் அசதி, நரம்பு பிடிப்பு, அதிகளவு ரத்தப் போக்கு போன்ற உபாதைகள் ஏற்படும். அவர்கள் இந்த முருங்கை ஈர்க்கு சூப் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுதல் வேண்டும். இளம் வயது பெண்கள் இதை வாரம் மூன்று முறை உட்கொள்வதால், மாதவிடாய் காலங்களில் வரும் அடிவயிற்று வலி குறையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக