11/13/2011

பிரபஞ்சம் எப்படி தோன்றியது?


பிரபஞ்சம் யுக யுகங்களாக நீடித்து வந்திருப்பதை நாமெல்லாம் அறிவோம். ஆனால் அந்த மட்டமான அறிவோடு நமது ஆர்வ வேட்கை நின்று விடுவதில்லை. அதன் தோற்றத்தைப் பற்றியும்,தோற்ற மாற்றத்தை பற்றியும் மாற்றத்தின் பயன்பாடுகள் பற்றியும் நமக்கு பல்வேறு வினாக்கள் தொடர்ந்து எழுகின்றன.


நமது பிரபஞ்சம் எப்படி தொன்றியது? நமது முதிர்ந்த பிரபஞ்சத்திற்கு எத்தனை வயதாகின்றது? எப்படி அதில் பிண்டமும் சக்தியும் உண்டாயின? அவையெல்லாம் எளிய வினாக்களாக தோன்றினாலும் அவற்றின் விடைகள் சிக்கலானவை. உலகப் பெரு விஞ்ஞானிகள் பலரின் எதிர்பார்ப்பிற்கும் தாக்கத்திற்கும் உட்பட்டவை. 

நிகழ்காலம் கடந்த காலத்தின் நிழலாக இருப்பதால் நம் கண்முன் காண்பதிலிருந்து நாம் காணாத முந்தைய காட்சிகளை ஓரளவு அறிய ஏதுவாகின்றது. ஆனால் அவற்றில் பல விஞ்ஞானிகளின் கருத்துக்கள் கோட்பாட்டுக்கள் உறுதியற்ற ஊகிப்புக்கள் தான். பிரபஞ்சம் எப்படி படைக்கப்பட்டது? பிரபஞ்சத்திற்கு ஆரம்பமும் இல்லை முடிவும் இல்லை. 

அது மெய்யாக வரையறைக்கு உட்படாது. என்ற கருத்துக்கள் ஒரு காலத்தில் நிலவி வந்தது. மேதைகளும், மதமும் வலியுருத்திய பூமியைக் கொள்கையிலிருந்து பரிதி மையக் கொள்கைக்கு வந்து சுமார் நானூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. ரஷ்ய அமெரிக்க விஞ்ஞானி ஜோர்ஜ் காமாவ் ஊகித்த பெருவெடிப்புக் கொட்பாடு அமெரிக்க விஞ்ஞானி எட்வின் ஹப்பிளால் நிருபணமாகி 20 ஆம் நூற்றாண்டிலே உலக விஞ்ஞானிகள் பலரால் ஒப்புக்கொள்ளப்படிருக்கின்றது. பெரு வெடிப்புக்கோட்பாட்டை ஏற்றுக்கொண்ட பிறகு பிரபஞ்சக் கருத்துக்குத் தொற்றம் ஆரம்பம் தொடங்கிய கால கடிகார முள் நகர தொடங்கி யது. பிரபஞ்சம் வரையறையற்றது என்னும் கருத்து மறைந்து போனது. பிரபஞ்சத்துக்கு ஆரம்பமும் முடிவும் ஊகிக்கப்பட்டு அதன் தோற்ற வளர்ச்சி வரலாறுகளும் எழுதப்பட்டன!

சுமார் 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு (துல்லியமாக 13.7 பில்லியன் ஆண்டுகள்) ஓர் அரசுப் பெரு வெடிப்பில் பிரபஞ்ஞம் தோன்றி விரிய ஆரம்பித்தது. அந்த நிகழ்ச்சியின் ஆரம்ப நிலையில் விண்வெளியில் இருந்து இனைத்துப் பிண்டமும் சத்தியும் ஒற்றைப் பிண்டமாய் அடங்கிக் கிடந்தன. ஆனால் அந்த பெரு வெடிப்பு நிகழ்ச்சிக்கு முன்பு என்ன இருந்தது என்பது சுத்த ஊகிப்பாய் அமைந்து முற்றிலும் அறியப்படாமலே தொங்கிக் கொண்டிருந்தது. அந்தப் பெரு வெடிப்பு மரபு வெடிகுண்டு போல் வெடிக்காது. 

உட்பிண்டங்கள் உருமாறி ஒன்றை ஒன்று சுற்றிக் கொண்டு ஒளிவீசி நகர்ந்து கொண்டு பலூனைப் விரிந்து பெருகி வருகிறது பிரபஞ்சம். அதாவது பெரு வெடிப்பு பிரபஞ்சத் தொற்றத்திற்கு வித்திட்டது என்பது நிகழ்கால முடிவு. வேறோர் பிரபஞ்சத்துக்கு ஏற்பட்ட சீர்குலைவுப் பயணத்தின் பெரும் பாய்ச்சலில் தற்பேது நாம் வாழும் பிரபஞ்சமாய்ப் பிறந்திருப்பதாக தெரிகிறது என்னும் புதிய நோக்குக் கோட்பாட்டைப் பென்சில் வேனியா மாநிலப் பல கலைக் கழகத்தின் துணைப் போஜோ வால்ட் கணனி மொடல் ஒன்றைப் படைத்துக் கண்டுபிடித்திருக்கின்றார். இவ்வாறு பிரபஞ்ச வெடிப்பு தோன்றியுள்ளது.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக