10/04/2014

முருங்கை ஈர்க்கு ரசம் .......


தேவையான பொருட்கள்:

முருங்கை ஈர்க்கு - 2 பிடி
மிளகு தூள் - ஸ்பூன்
சீரக தூள் - ஸ்பூன்
உப்பு - தேவைகேற்ப
தக்காளி - 1
மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
கடுகு - தேவைகேற்ப
எண்ணெய் - 1 ஸ்பூன்
தண்ணீர் - 2 கப்

செய்முறை:
* தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

* முருங்கை கிளையில் இளம் குச்சிகளை சுத்தம் செய்து இடித்தபின் ஒரு பாத்திரத்தில் 2 கப் நீர்விட்டு அதில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, தக்காளி, மிளகு மற்றும் சீரகப் பொடி சேர்த்து கலக்கவும்.

* இதனை அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து, கடுகு மற்றும் பெருங்காயம் போட்டு தாளித்து இறக்கவும்.

* சுறுசுறுப்பை தரும் சுவையான முருங்கை ஈர்க்கு ரசம் தயார்.

மருத்துவ பயன்கள்:

முருங்கை கீரையில் சுண்ணாம்பு சத்தும், இரும்பு சத்தும், வைட்டமின் கி மற்றும் சி அதிகமாக உள்ளது. ரத்த சோகை உள்ளவர்கள் இளம் தளிராக உள்ள முருங்கை கீரையை உண்டு வந்தால் ரத்தத்தில் உள்ள ஹீமோகுலோபின் அளவு உயரும்.

முன்பெல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு முருங்கை மரமிருக்கும். அந்த நிலை இப்பொழுது மாறி அமாவாசை, கிருத்திகை அன்று மட்டும் முருங்கை கீரையை தேடி மார்கெட்டுக்கு செல்லும் நிலை உள்ளது. முருங்கை ஈர்க்குகளில் அதிகளவு கால்சியம் உள்ளதால் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்ததாகும்.

பொதுவாக மேனோபாஸ் வயதில் உள்ள தாய்மார்களுக்கு மூட்டு வலி, கை கால் அசதி, நரம்பு பிடிப்பு, அதிகளவு ரத்தப் போக்கு போன்ற உபாதைகள் ஏற்படும். அவர்கள் இந்த முருங்கை ஈர்க்கு சூப் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுதல் வேண்டும். இளம் வயது பெண்கள் இதை வாரம் மூன்று முறை உட்கொள்வதால், மாதவிடாய் காலங்களில் வரும் அடிவயிற்று வலி குறையும்.

12/30/2011

அழகான பேஸ்புக் கவர் பேனர்.............

பேஸ்புக்கின் புதிய Timeline தோற்றத்தில் Cover என்ற ஒரு புதிய வசதி உள்ளது. இந்த இடத்தில் நமக்கு தேவையான ஒளிப்படத்தை வைத்து கொள்ளலாம்.
இணையத்தில் ஏராளமான ஒளிப்படங்கள் இருந்தாலும் அனைத்தும் பேஸ்புக் timeline cover ஏற்ற அளவில்(size) இருக்காது. ஆதலால் பேஸ்புக் timeline ஒளிப்படங்கள் வைப்பதற்கென்றே சில பிரத்யோகமான தளங்கள் உள்ளது.
1. 99covers: இந்த தளத்தில் மிகச் சிறந்த bannerகள் உள்ளது.
2. facebookprofilecovers: இந்த தளத்திலும் விதவிதமான அழகான பேஸ்புக் கவர் ஒளிப்படங்கள் உள்ளது.
3. timelinecoverbanner: இங்கு விதவிதமான அழகான பேஸ்புக் பேனர்கள் உள்ளது. இதில் உங்களுக்கு தேவையானதை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள் மற்றும் இதில் உள்ள bannerகளை உங்கள் விருப்பப்படி மாற்றி கொள்ளலாம்.

12/20/2011

பிடித்தமான இசையினை கேட்டு மகிழ்வதற்கு;;;;;;;;;;;;;;

இசைக்கு மயங்காத உயிரினங்கள் என்று எதுவும் கிடையாது. ஒவ்வொரு இசைக்கும் ஒவ்வொரு வல்லமை உண்டு.
சில வகையான இசை நம்மை வீரம் உள்ளவர்களாக மாற்றும், சில வகை இசைகள் மனதை வருடும், சில வகையான இசை ஆட்டம் பாட்டத்தை உண்டு பண்ணும், அந்த வகையில் இன்று மனதிற்கு ஒய்வளிக்கும் இசையயை ஒரு தளம் கொடுக்கிறது.
அழகான படங்கள் சில நேரங்களில் நம் மனதை விட்டு செல்லாமல் மகிழ்ச்சியை கொடுத்து கொண்டிருக்கும். அதே போல் தான் சில இனிமையன இசை நம் மனதிற்கும் உடலுக்கும் ஓய்வளிக்கும். இப்படி அழகான படமும் ஒய்வளிக்கும் இசையையும் நமக்கு இலவசமாக கொடுக்க ஒரு தளம் உள்ளது.
இயற்கையில் இருந்து வரும் மெல்லிய இசை நம் மனதிற்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மகிழ்ச்சியை அளிக்கும். அந்த வகையில் இந்த தளத்தில் கிடைக்கும் பலவகையான இசை பகுதி வாரியாக பிரிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு இசையும் அதற்கு தொடர்பான அழகான படத்துடன் காண்பதற்கும் கேட்பதற்கும் அழகாக இருக்கிறது. இசையின் ஒலி அளவை ஏற்றம் செய்வது முதல் நமக்கு தகுந்தபடி மாற்றி அமைக்கும் படியும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இயற்கையில் கிடைக்கும் அத்தனை வகையான சத்தங்களையும் அழகாக பதிவு செய்து நம் மனதிற்கு ஓய்வளிக்கும்.

கூகுளின் சில மேஜிக்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

தேடுதலுக்கு அனைவரும் பயன்படுத்தும் கூகுள் தளத்தில் தேடுதலை சுவாரஸ்யமாக மாற்ற சில மேஜிக் வார்த்தைகள் உள்ளன.
இந்த வார்த்தைகளை கொடுத்தால் கூகுள் தளம் சில சுவாரஸ்யமான வடிவங்களில் மாறும். இதனை ஆங்கிலத்தில் Easter Eggs என அழைக்கப்படுகிறது.
Let it Snow: இந்த வார்த்தையை கூகுள் தேடியந்திரத்தில் கொடுத்து தேடினால் உங்களின் கூகுள் விண்டோவில் பனி மழை பொழியும். கிறிஸ்துமஸ் அன்பளிப்பாக இதனை உருவாக்கியுள்ளது.
Tilt: இந்த வார்த்தையை கூகுள் தேடியந்திரத்தில் கொடுத்து தேடினால் உங்களின் கூகுள் விண்டோ ஒரு பக்கம் சாய்வாக காட்சி அளிக்கும்.
Do a Barrel Roll: இந்த வார்த்தையை கொடுத்தால் கூகுள் விண்டோ ஒரு சுற்று சுற்றிவிட்டு பழைய நிலைமைக்கு வரும்.
Hanukkah: இந்த வார்த்தையை கூகுளில் கொடுத்து தேடினால் கூகுள் பாருக்கு கீழே நட்சத்திரத்தினால் ஆன ஒரு வரி காணப்படும்.