11/15/2011

இரண்டாம் உலகப் போரில் மூழ்கடிக்கப்பட்ட நீர் மூழ்கி கப்பல் கண்டுபிடிப்பு.........

இரண்டாம் உலகப் போரின் போது எதிரிப் படைகளால் மூழ்கடிக்கப்பட்டதாகக் கருதப்படும் ஜப்பானின் நீர் மூழ்கிக் கப்பல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தக் கப்பல்கள் நீயூகினியா ஆழ் கடல் பகுதியில் கண்டுபிடிக்கப் பட்டிருப்பத்தாக ஆழ்கடலில் ஆய்வு மேற்கொண்ட ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 60க்கும் அதிகமான நீர் மூழ்கிக்கப்பல் 180 அடி ஆழத்தில் மூழ்கி இருந்ததாக அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜப்பானின் கடற்படைத் துறைமுகம் இரண்டாம் உலகப் போரின் போது பப்புவா நியூகினியாவில் இருந்தது. இவை எதிரிப்படைகளின் போர்க் கப்பல்களையும் துறைமுகங்களையும் தாக்குவதற்கு பயன்பட்டதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக அமெரிக்காவின் பேல் துறை முகத்தைத் தாக்குவதற்கு பயன்படுத்தி இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இவை அனைத்தும் அமெரிக்க நேசப்படையினரால் மூழ்கடிக்கப்பட்டிருக்க வேண்டுமென ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்........................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக