11/19/2011

பொன்னியின் செல்வன்............

பொன்னியின் செல்வன்...... கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் சரித்திர நாவலாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில்தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இந்த நாவலுக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்தும் பல்வேறு காலகட்டங்களில் இதே நாவலை கல்கி இதழ் தொடராக வெளியிட்டது. தவிர தனி நூலாகவும் வெளியிடப்பட்டுப் பல பதிப்புக்களைக் கண்டுள்ளது. கி.பி. 1000 ஆம் ஆண்டு வாக்கில் இருந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு இந்தவரலாற்றுப் சரித்திர நாவல் எழுதப்பட்டிருக்கிறது.from {http://www.facebook.com/pages/}


எனக்கு மிகவும் பிடிக்கும்..............

பொன்னியின் செல்வன் 5 பாகத்தையும் கிழே உள்ள Linkல் கிளிக் செய்து Download செய்து கொள்ளவும்..............

பாகம் 1a - Download                                              பாகம் 1b - Download


பாகம் 2a - Download                                              பாகம் 2b - Download


பாகம் 3a - Download                                              பாகம் 3b - Download


பாகம் 4a - Download                                              பாகம் 4b - Download


பாகம் 5a - Download                                              பாகம் 5b - Download


பாகம் 5c - Download                                              பாகம் 5d - Download

போட்டோவை அழகுபடுத்த சிறந்த 10 தளங்கள்


Photoshop தெரியாதவர்களுக்கு  இணையத்தில் மிக எளிதாக Photo அழகூட்ட பல்வேறு தளங்கள் உள்ளன. அவற்றில்  சிறந்த பத்து தளங்களை இங்கே பார்ப்போம்.




  
மேலே குறிப்பிட்டுள்ள தளங்களுக்கு சென்று உங்களுக்கு வேண்டிய டிசைனை தேர்வு செய்யவும். பின் உங்களுடைய படத்தினை பதிவேற்றம் செய்யவும். தற்போது நீங்கள் குறிப்பிட்ட போட்டோ, நீங்கள் தேர்வு செய்த டிசைனோடு இணைந்து இருக்கும். அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். இதன் மூலம் எளிமையாக உங்களுடைய படத்திற்கு அழகூட்ட முடியும்.'


                     எனது தவறுகளையும் குறைகளையும் சுட்டிக்காட்டுங்கள்.samy

11/15/2011

இரண்டாம் உலகப் போரில் மூழ்கடிக்கப்பட்ட நீர் மூழ்கி கப்பல் கண்டுபிடிப்பு.........

இரண்டாம் உலகப் போரின் போது எதிரிப் படைகளால் மூழ்கடிக்கப்பட்டதாகக் கருதப்படும் ஜப்பானின் நீர் மூழ்கிக் கப்பல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தக் கப்பல்கள் நீயூகினியா ஆழ் கடல் பகுதியில் கண்டுபிடிக்கப் பட்டிருப்பத்தாக ஆழ்கடலில் ஆய்வு மேற்கொண்ட ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 60க்கும் அதிகமான நீர் மூழ்கிக்கப்பல் 180 அடி ஆழத்தில் மூழ்கி இருந்ததாக அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜப்பானின் கடற்படைத் துறைமுகம் இரண்டாம் உலகப் போரின் போது பப்புவா நியூகினியாவில் இருந்தது. இவை எதிரிப்படைகளின் போர்க் கப்பல்களையும் துறைமுகங்களையும் தாக்குவதற்கு பயன்பட்டதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக அமெரிக்காவின் பேல் துறை முகத்தைத் தாக்குவதற்கு பயன்படுத்தி இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இவை அனைத்தும் அமெரிக்க நேசப்படையினரால் மூழ்கடிக்கப்பட்டிருக்க வேண்டுமென ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்........................

11/13/2011

பிரபஞ்சம் எப்படி தோன்றியது?


பிரபஞ்சம் யுக யுகங்களாக நீடித்து வந்திருப்பதை நாமெல்லாம் அறிவோம். ஆனால் அந்த மட்டமான அறிவோடு நமது ஆர்வ வேட்கை நின்று விடுவதில்லை. அதன் தோற்றத்தைப் பற்றியும்,தோற்ற மாற்றத்தை பற்றியும் மாற்றத்தின் பயன்பாடுகள் பற்றியும் நமக்கு பல்வேறு வினாக்கள் தொடர்ந்து எழுகின்றன.


நமது பிரபஞ்சம் எப்படி தொன்றியது? நமது முதிர்ந்த பிரபஞ்சத்திற்கு எத்தனை வயதாகின்றது? எப்படி அதில் பிண்டமும் சக்தியும் உண்டாயின? அவையெல்லாம் எளிய வினாக்களாக தோன்றினாலும் அவற்றின் விடைகள் சிக்கலானவை. உலகப் பெரு விஞ்ஞானிகள் பலரின் எதிர்பார்ப்பிற்கும் தாக்கத்திற்கும் உட்பட்டவை. 

நிகழ்காலம் கடந்த காலத்தின் நிழலாக இருப்பதால் நம் கண்முன் காண்பதிலிருந்து நாம் காணாத முந்தைய காட்சிகளை ஓரளவு அறிய ஏதுவாகின்றது. ஆனால் அவற்றில் பல விஞ்ஞானிகளின் கருத்துக்கள் கோட்பாட்டுக்கள் உறுதியற்ற ஊகிப்புக்கள் தான். பிரபஞ்சம் எப்படி படைக்கப்பட்டது? பிரபஞ்சத்திற்கு ஆரம்பமும் இல்லை முடிவும் இல்லை. 

அது மெய்யாக வரையறைக்கு உட்படாது. என்ற கருத்துக்கள் ஒரு காலத்தில் நிலவி வந்தது. மேதைகளும், மதமும் வலியுருத்திய பூமியைக் கொள்கையிலிருந்து பரிதி மையக் கொள்கைக்கு வந்து சுமார் நானூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. ரஷ்ய அமெரிக்க விஞ்ஞானி ஜோர்ஜ் காமாவ் ஊகித்த பெருவெடிப்புக் கொட்பாடு அமெரிக்க விஞ்ஞானி எட்வின் ஹப்பிளால் நிருபணமாகி 20 ஆம் நூற்றாண்டிலே உலக விஞ்ஞானிகள் பலரால் ஒப்புக்கொள்ளப்படிருக்கின்றது. பெரு வெடிப்புக்கோட்பாட்டை ஏற்றுக்கொண்ட பிறகு பிரபஞ்சக் கருத்துக்குத் தொற்றம் ஆரம்பம் தொடங்கிய கால கடிகார முள் நகர தொடங்கி யது. பிரபஞ்சம் வரையறையற்றது என்னும் கருத்து மறைந்து போனது. பிரபஞ்சத்துக்கு ஆரம்பமும் முடிவும் ஊகிக்கப்பட்டு அதன் தோற்ற வளர்ச்சி வரலாறுகளும் எழுதப்பட்டன!

சுமார் 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு (துல்லியமாக 13.7 பில்லியன் ஆண்டுகள்) ஓர் அரசுப் பெரு வெடிப்பில் பிரபஞ்ஞம் தோன்றி விரிய ஆரம்பித்தது. அந்த நிகழ்ச்சியின் ஆரம்ப நிலையில் விண்வெளியில் இருந்து இனைத்துப் பிண்டமும் சத்தியும் ஒற்றைப் பிண்டமாய் அடங்கிக் கிடந்தன. ஆனால் அந்த பெரு வெடிப்பு நிகழ்ச்சிக்கு முன்பு என்ன இருந்தது என்பது சுத்த ஊகிப்பாய் அமைந்து முற்றிலும் அறியப்படாமலே தொங்கிக் கொண்டிருந்தது. அந்தப் பெரு வெடிப்பு மரபு வெடிகுண்டு போல் வெடிக்காது. 

உட்பிண்டங்கள் உருமாறி ஒன்றை ஒன்று சுற்றிக் கொண்டு ஒளிவீசி நகர்ந்து கொண்டு பலூனைப் விரிந்து பெருகி வருகிறது பிரபஞ்சம். அதாவது பெரு வெடிப்பு பிரபஞ்சத் தொற்றத்திற்கு வித்திட்டது என்பது நிகழ்கால முடிவு. வேறோர் பிரபஞ்சத்துக்கு ஏற்பட்ட சீர்குலைவுப் பயணத்தின் பெரும் பாய்ச்சலில் தற்பேது நாம் வாழும் பிரபஞ்சமாய்ப் பிறந்திருப்பதாக தெரிகிறது என்னும் புதிய நோக்குக் கோட்பாட்டைப் பென்சில் வேனியா மாநிலப் பல கலைக் கழகத்தின் துணைப் போஜோ வால்ட் கணனி மொடல் ஒன்றைப் படைத்துக் கண்டுபிடித்திருக்கின்றார். இவ்வாறு பிரபஞ்ச வெடிப்பு தோன்றியுள்ளது.